Saturday, December 12, 2009

காதலன் எனும் துரோகிக்கு!

உன்
துரோகத்தால்
தொலைந்து போனது
நிம்மதி மட்டுமல்ல நிஜமான என் நேசமும்தான்................!


உன் நயவஞ்சகத்தால்
நசுங்கி போனது
நட்பு மட்டுமல்ல...
நாளைய பற்றிய நம்பிக்கையும்தான்

உன்
கபட பார்வையால்
கருகி போனது
கனவுகள் மட்டுமல்ல... எல்லோரும் நல்லவர்
என்கிற என்னம்களும் தான்.............!
இப்போது
ஏமாற்றிய நீயோ
ஏக சந்தோஷத்தில்...............!

ஏமாளியான நானோ
இடி தாங்கிய வேதனையில்...............!
என்னுடைய
இந்த சோகமும்....
உன்னுடைய
ஏமாற்றும் வித்தையும்
என்றும் நிரந்தரமல்ல...

எப்போதும் வஞ்சகங்கள் வாழ்ந்து விடுவதும் இல்லை....!
காலங்கள் மாறுகிற போது...
மனக் காயங்கள் ஆறுகிற போது...
மீண்டும் நான்
புதிதாய் பிறப்பேன்....
இன்னொரு முறை ஏமாறாமல் இருப்பதற்கு......!

No comments:

Post a Comment

Comments please